இன்ஸ்டாகிராமில் 10 கோடி பேர் பின்தொடர்பவர்கள்: புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது, இன்ஸ்டாகிராம் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை கடந்த முதல் அரசியல்வாதி என்ற சாதனையை அவர் பதிவு செய்துள்ளார்.

2014ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமர் மோடி, தொடர்ந்து இன்ஸ்டாகிராம்செயலில் இருந்து வருகிறார். உலக நாடுகளின் தலைவர்களில் இவருக்கே அதிகமான (இன்ஸ்டாகிராம்) பின்தொடர்பவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 15 மில்லியன், பிரேசில் அதிபர் லூலா டா சில்வா 14.4 மில்லியன், துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்டோகன் 11.6 மில்லியன் மற்றும் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய் 6.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here