ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்; பள்ளி குழந்தைகள் 51 பேர் பலி

தெஹ்ரான் தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

ஈரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் ஈரானை தாக்கியது. இதுபற்றி மாகாண கவர்னர் முதலில் கூறும்போது, பள்ளி குழந்தைகளின் பலி எண்ணிக்கை 24 என கூறினார். இந்த எண்ணிக்கை 51 ஆக உயர்ந்து உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. போர் ஜெட் விமானங்கள் மேல்நோக்கி பறந்து வந்தன. இதனால் குழந்தைகள் வகுப்பறைகளை விட்டும், பள்ளிகளை விட்டும் வெளியேறி ஓடினர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் “பெரிய போர் நடவடிக்கைகள்” என்று அழைத்த நிலையில் ஈரானை அமெரிக்கா இன்று தாக்கியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை தொடர்ந்தும், அமெரிக்காவுடன் இஸ்ரேலிய தாக்குதல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் இது இன்னும் விரிவடையும் என பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here