ஜோகூரில் குப்பை கொட்டிய 15 பேருக்கு நீதிமன்றம் ‘சம்மன்’: முதல் முறையாகச் சிங்கப்பூர் நாட்டவர் மீது வழக்கு!

ஜோகூர் பாரு | மார்ச் 12, 2026 :

ஜோகூர் பாரு மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டியதற்காக (Littering), 40 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூர் நாட்டவர் உட்பட 15 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.

ஜோகூர் மாநிலத்தில் குப்பை கொட்டியதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் முதல் சிங்கப்பூர் நாட்டவர் இவராவார் என்று, ஜோகூர் மாநில திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழக (SWCorp) இயக்குநர் சைனல் பித்ரி அகமது தெரிவித்தார்.

இந்தச் சிங்கப்பூர் நாட்டவர் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மற்ற 15 பேர் மீதான வழக்குகள் மார்ச் 28 முதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்.

15 பேரில் 5 பேர் ஏற்கனவே சமூக சேவை (Community Service) தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here