அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தையா…? ஒருபோதும் இல்லை; 5 ஆண்டுகளுக்கு போரை தொடர தயார்: ஈரான் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி இந்தியாவில் உள்ள ஈரானின் உச்ச தலைவருக்கான பிரதிநிதி மஜித் ஹகீம் இலாஹியிடம், மேற்காசிய போரால் பதற்றம் அதிகரித்து உள்ள சூழல் பற்றி இன்று பேசப்பட்டது. அப்போது, பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஈரான் விரும்பியது என டிரம்ப் கூறியது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தைக்காக கோரிக்கை விடுத்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்து பேசினார்.

அவர் கூறும்போது, இல்லை. ஒருபோதும் இல்லை. இனியும் கிடையாது. இந்த தருணத்தில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. ஏனெனில், அவர்கள்தான் போரை தொடங்கினர். அவர்களிடம் நாங்கள் அனுபவப்பட்டு இருக்கிறோம்.

2 முறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் எங்களை தாக்கினார்கள். இலக்காக கொண்டு தாக்கினர். எதிரிகளிடம் ஈரான் சரணடையாது. தேவைப்பட்டால் நீண்டகால மோதலுக்கு தயாராகவே உள்ளது.

இந்த போருக்கு காலக்கெடு எதுவும் உண்டா? என்று எனக்கு தெரியாது. ஆனால், போரின் இறுதி வரை போராட ஈரான் தயாராக உள்ளது என்பது எனக்கு தெரியும். அது 5 ஆண்டுகள் ஆனால் கூட என்றார். போரில் எங்களுக்கு அனுபவம் உள்ளது.

ஈரான் மற்றும் ஈராக் இடையேயான போரின்போது, ஏற்பட்ட 8 ஆண்டுகால அனுபவம் எங்களிடம் உள்ளது. ஈரானின் தெருக்களை சென்று பார்த்தால் தெரியும். பதிலடி கொடுங்கள் என எங்களுடைய மக்கள் கோஷமிடுகின்றனர். அதற்காக உயிரையும் கூட கொடுக்க அவர்கள் தயாராக உள்ளனர். ஆனால், எங்களுடைய பூமியை கொடுக்க ஒருபோதும் நாங்கள் தயாராக இல்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here