மார்ச் 18 – 19 ஆகிய தேதிகள் 50 விழுக்காடு டோல் கட்டணத்தில் பயணிக்கலாம்

ஹரிராயாவை  முன்னிட்டு சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் செலவைக் குறைக்கும் வகையில், சுங்கக் கட்டணத்தில் (டோல்0 50% தள்ளுபடியை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தள்ளுபடி மார்ச் 18 அன்று அதிகாலை 12.01 மணிக்குத் தொடங்கி, மார்ச் 19 அன்று இரவு 11.59 மணிக்கு முடிவடையும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பொதுமக்களின் பயணச் செலவுகளைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) இங்கு நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். சுங்கக் கட்டணச் சலுகை நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக இந்த முயற்சிக்கு 21.03 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here