ஒடிசா: மருத்துவ கல்லூரி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

கட்டாக் ஒடிசாவில் கட்டாக் நகரில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானார்கள். இதில் சம்பவ இடத்தில் 7 பேரும், சிகிச்சை பலனின்றி 3 பேரும் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், மருத்துவ கல்லூரி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. முதல் தளத்தின் ஐ.சி.யு. பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும்போது, 11 ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்கள் உடல்நிலை தேறியுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. சம்பவத்தின்போது, தீ விபத்தில் சிக்கிய 23 நோயாளிகள் உடனடியாக மீட்கப்பட்டு வேறு வார்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால், அவர்கள் உயிர் தப்பினர்.

இதில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மஜ்ஜி, பலியானவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here