’ஹீரோயினுக்கு முக்கியத்துவம்… நடிக்க மறுத்த ஹீரோ’ – டாப்சி ஓபன் டாக்

சென்னை,தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் டாப்சி. திருமணத்திற்கு பிறகும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்சி, திரையுலகில் ஆண்கள் ஆதிக்கம் குறித்து கூறிய கருத்துகள் தற்போது வைரலாகி வருகின்றன.

சமீபத்திய ஒரு பேட்டியில், ஹீரோயின்களை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்க பல ஹீரோக்கள் தயங்குவதாக டாப்சி கூறியுள்ளார். குறிப்பாக, அவர் ஒரு படத்தில் டபுள் ரோல் செய்த சமயம் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “எனது ஒரு படத்துக்காக தயாரிப்பாளர்கள் முதலில் ஒரு பிரபல ஹீரோவை அணுகினர். ஆனால் அந்த ஹீரோ, கதையில் ஹீரோயின் ரோல் முக்கியமாக இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு, அந்த படத்தை நிராகரித்தார். நான் முன்பு அந்த ஹீரோவுடன் பணியாற்றியிருந்தபோதும், ரோலின் நீளமும் முக்கியத்துவமும் காரணமாக அவர் பின்வாங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.

வலுவான கதைகளில் நடித்து தனித்துவமான இடத்தை பெற்ற டாப்சி இவ்வாறு கூறியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here