லா லிகா: ரியல் மாட்ரிட் அணி வெற்றி

எஸ்தாதியோ பெர்னாபியூ மைதானத்தில் நடந்த லா லிகா போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் அட்லெடிகோ மாட்ரிட் வீரர் அடெமோலா லுக்மான் அபாரமாக கோல் அடித்தார்.

அதனைத் தொடர்ந்து, 52வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் வினிஸியஸ் ஜூனியர் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.

அடுத்து 55வது நிமிடத்தில் எதிரணி வீரர் கடத்த முயன்ற பந்தை, ரியல் மாட்ரிட் வீரர் ஃபெடெரிகோ வல்வேர்டே குறுக்கிட்டு பறித்து கோலாக மாற்றினார்.

அதற்கு பதிலடியாக அத்லெடிகோ மாட்ரிட் வீரர் நஹுஎல் 66வது கோல் அடித்தார். ஆனால், அடுத்த 6 நிமிடங்களிலேயே வினிஸியஸ் ஜூனியர் (Vinicius Junior) அபார கோல் அடித்தார்.

ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் ஃபெடெரிகோ வல்வேர்டே (Federico Valverde) எதிரணி வீரரின் காலினை இடற செய்ததால் சிவப்பு அட்டை பெற்றார்.

இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here