சமூக ஒற்றுமைதான் நிலையான வளர்ச்சியின் அடித்தளம் டத்தோ அமாலுடின் இஸ்மாயில்

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நிலைத்த வளர்ச்சிக்கும் சமூக ஒற்றுமை இன்றியமையாதது என பேராக் இந்தியர் கால்பந்து சங்கத் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் வலியுறுத்தினார். பல்வேறு இனங்கள், மொழிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து வாழ்வதே ஒரு சமூதாயத்தின் பலமாகும் என ஈப்போவில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூக ஒற்றுமை இல்லையெனில், ஒரு நாடு முழுமையான வளர்ச்சியை அடைய முடியாது. பரஸ்பர மரியாதை, புரிதல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கிய அம்சங்களாகும்,” என அவர் கூறினார். மேலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரித்து, பரிமாற்றங்களை ஊக்குவிப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் மக்கள் இடையிலான புரிதல் விரிவடைந்து, சமாதானமும் ஸ்திரத்தன்மையும் நிலைபெறும் என கூறினார். சமூக ஒற்றுமை பன்முகத்தன்மையை ஊக்குவித்து, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது என தொழிலதிபருமான டத்தோ அமாலுடின் இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here