ஈரானின் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டம்?

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது ‘பாகர் காலிபாப் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறியதாவது:-சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாடுகளில் ஒன்றின் ஆதரவுடன் ஈரானின் தீவுகளில் ஒன்றை கைப்பற்ற தயாராகி வருகின்றனர்.எங்கள் படை கள் எதிரிகளின் அனைத்து நகர்வு களையும் கண்காணித்து வருகின்றன. அவர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அந்த பிராந்திய நாட்டின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புகள் மீதும் இடைவிடாமல் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த 13-ந்தேதி ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் 90 சதவீதம் நடந்து வரும் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. வடகிழக்கு வளைகுடாவில் உள்ள கார்க் பாரசீக தீவை கைப்பற்ற, அமெரிக்க படைகளை பயன்படுத்துவது குறித்து டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here