கிள்ளான் விபத்தில் பலியானவரின் மனைவி, “உயிருக்கு உயிர் வேண்டும்” என்கிறார்

விபத்தில் கணவரை இழந்த மாது

 கிள்ளானில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை நடந்த கோரமான விபத்தில் பலியானவரின் மனைவி, தனது மறைந்த கணவர், 33 வயதான அமிருல் ஹபீஸ் ஓமருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரி, “உயிருக்கு உயிர்” வேண்டும் எனக் கேட்டுள்ளார். 32 வயதான நார் நாடியா அப்துல் மஜித், வழக்கறிஞர் ஃபைசி சே அபுவுடன் காலை 9.53 மணிக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்தார். என் கணவரைக் கொன்றவன் எங்கே? உயிருக்கு உயிரால் பதிலடி கொடுக்க வேண்டும் என்று மூன்று பிள்ளைகளின் தாயான அவர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்தபோது கூறினார்.

20 வயதுகளில் உள்ள ஓட்டுநர், காவல்துறையினருடன் காலை 8.53 மணிக்கே வந்துவிட்டார். விபத்து நடந்த உடனேயே கைது செய்யப்பட்ட அந்த ஓட்டுநர், சம்பவம் நடந்த நேரத்தில் மது மற்றும் போதைப்பொருள் போதையில் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மது அல்லது போதைப்பொருள் போதையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1)-இன் கீழ் அவர் விசாரிக்கப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 50,000 ரிங்கிட் முதல் 100,000 லட்சம் ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படலாம். எதிர்திசைப் பாதையில் முந்திச் சென்ற ஒரு கார், அமிருலின் மோட்டார் சைக்கிள் மீது மோதி, அவரை காற்றில் தூக்கி எறிந்து மற்றொரு வாகனத்தின் மீது விழச் செய்ததை ஒரு டாஷ்கேம் வீடியோ காட்சி காட்டியது. அமிருல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here