அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

மேற்கு ஆசியப் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயர்ந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் இணைய வேண்டும் என்றும், இதற்காக தங்கள் நாட்டுப் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். ஆனால், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கூட இதைப் பொருட்படுத்தவில்லை.

இது டிரம்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வு, பற்றாக்குறை என பல நாடுகள் தவித்து வருகின்றன.

இந்த நெருக்கடி அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ஐ தாண்டியுள்ளது. பெட்ரோல் மட்டுமின்றி இதர பொருட்களும் விலை உயர்ந்துள்ளதால் அமெரிக்காவில் டிரம்புக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பாக, அதாவது பிப்ரவரி 28 வரை அமெரிக்காவில் ஒரு கேலன் (சுமார் 3.7 லிட்டர்) பெட்ரோல் விலை 2.98 டாலராக இருந்தது. அதேபோல், 3.76 ஆக இருந்த டீசல் விலை தற்போது 5.45 டாலராக உயர்ந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here