ஜோகூர் உட்பட 5 மாநிலங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை எச்சரிக்கை!

கோலாலம்பூர்:

ஜோகூர் மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், ஜோகூர் உட்பட நாட்டின் ஐந்து மாநிலங்களில் இன்று நண்பகல் 12 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வானிலையை ஜோகூரின் தங்காங், மூவார், பத்து பகாட், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்கள் எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

மேலும் கெடா (கோத்தா ஸ்டார், போகோக் செனா, யான், பெந்தோங்); பேராக் (மஞ்சுங், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக்); நெகிரி செம்பிலான் (ரெம்பாவ், தம்பின்) மற்றும் மலாக்கா மாநிலம் முழுவதுமாக இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், குறிப்பாக வாக்களிக்கச் செல்லும் ஜோகூர் மாநில வாக்காளர்கள் விழிப்புடன் இருக்குமாறும், வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வத் தளங்கள் மூலம் உடனுக்குடன் நிலவரங்களைத் தெரிந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here