அரசு நிதி மோசடியை ஒழிக்க ஜே.டி. வேன்ஸ் நியமனம்: டிரம்ப் அதிரடி

வாஷிங்டன்,டிரம்ப் தனது ட்ரூத் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மோசடியை ஒழிப்பதற்கான அதிபரின் பணிக்குழு என்ற அமைப்பிற்கு ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குகிறார். தனது அமைச்சரவையில் உள்ள திறமையான நபர்களுடன் இணைந்து வேன்ஸ் செயல்படுவது, அரசு நிதியை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவும் என கூறினார். வேன்ஸை நாம் அவரை மோசடி ஜார்(மோசடிக்கு எதிரான சக்கரவர்த்தி) என்று அழைப்போம், என தெரிவித்தார்.

வேன்ஸின் கவனம் எல்லா இடங்களிலும் இருக்கும், ஆனால் முக்கியமாக கலிபோர்னியா, இல்லினாய்ஸ், மினசோட்டா, மெய்ன் மற்றும் நியூயார்க் போன்ற ஜனநாயகக் கட்சி ஆளும் மாநிலங்களில் வரி செலுத்துவோரின் பணம் திருடப்படுவதைத் தடுப்பதில் இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.

மினசோட்டா மாநிலத்தை குறிப்பிட்டபோது, “சோமாலியா ஜாக்கிரதை என்று எச்சரித்த அவர், அங்குள்ள சோமாலிய சமூகத்தை சேர்ந்தவர்களின் சமூக நல நிதியில் பெரிய அளவில் மோசடி செய்துள்ளதாகவும் மேலும் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்கனவே மோசடி தொடர்பான சோதனைகள் தொடங்கிவிட்டதாகவும், இந்த நடவடிக்கைகளில் வெற்றி பெற்றால் அமெரிக்க பட்ஜெட்டை சமன் செய்ய முடியும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜே.டி. வேன்ஸ்க்கு இந்த மோசடிக்கு எதிரான போரில் வெற்றி பெற டிரம்ப் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here