சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் ஊழியர் சடலமாக மீட்பு

ஈப்போ: தஞ்சோங் மாலிமில் உள்ள சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் (UPSI) விளையாட்டுப் பந்துவீச்சு மையத்தின் துப்புரவு உபகரணங்கள் சேமிப்பு அறையில், அந்த மையத்தின் ஊழியர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத்  துறைக்கு அதிகாலை 1.57 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு குழு சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அத்துறை தெரிவித்துள்ளது. 53 வயதான ராட்ஸி அரிஃபின் என்ற அந்த ஆண், பூட்டப்பட்ட சேமிப்பு அறையில் சிக்கியிருந்தார். தீயணைப்பு வீரர்கள் வந்ததும், UPSI துணைப் போலீசார் கதவைத் திறந்தனர்.

சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரிகளால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார் என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here