நடைபயிற்சி சென்றபோது வாக்குவாதம்… கோபத்தில் மனைவி செய்த விபரீத செயல்…

அகமதாபாத்,குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தை சேர்ந்த கணவன் – மனைவி இருவர் மாலை நேரத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில், கணவன் ஆத்திரத்தில் மனைவியை கன்னத்தில் அறைந்தார். இதனால் கடும் கோபமடைந்த மனைவி அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து கணவனின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உறுதிசெய்த பிறகு, மனைவி கணவர் இறந்துவிட்டதை அவரது உடல் அருகிலேயே இரவு முழுவதும் அமர்ந்து இருந்தார். பின்னர் அவரே போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை கைது செய்தனர். கணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் இடையே ஏன் சண்டை ஏற்பட்டது என்பது தெரியவில்லை. திடீர் வாக்குவாதம் அல்லது கோபத்தின் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் போலீசார் பெண்ணிடம் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here