துருக்கி: பள்ளியில் மாணவர் துப்பாக்கி சூடு; ஆசிரியர் உள்பட 4 பேர் பலி

அங்காரா துருக்கி நாட்டின் தென்கிழக்கே காஹ்ராமன்மராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் 2 வகுப்பறைகளுக்குள் புகுந்து உள்ளே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் உள்பட 4 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டில் 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனை மாகாண கவர்னர் முகரம் அன்லூவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்த சம்பவத்தில், மாணவரும் கொல்லப்பட்டு உள்ளார். அவர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என கூறப்படுகிறது. காவல் அதிகாரியான அவருடைய தந்தையின் துப்பாக்கியை மாணவர் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here