கெடாவில் கைரி போட்டியிடுகிறாரா? பிரச்சனையில்லை என்கிறார் கெடா மந்திரி பெசார் சனுசி

சனுசி

அலோர் ஸ்டார், முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதீன் உட்பட, மாநிலத் தேர்தலில் போட்டியிட விரும்பும் எந்தவொரு அரசியல் பிரமுகரையும் கெடா வரவேற்கிறது என்று பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) கெடா தலைவரும், கெடா மந்திரி பெசாருமான டத்தோ செரி முஹம்மது சனுசி எம்டி நோர் கூறினார். மலேசியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில், வரவிருக்கும் தேர்தலில் யார் வேண்டுமானாலும் எந்த மாநிலத்திலும் போட்டியிட சுதந்திரம் உண்டு என்று சனுசி கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

யார் வேண்டுமானாலும் வந்து கெடாவில் போட்டியிடலாம். கெடா மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். கெடா அனைவரையும் வரவேற்கிறது என்று அவர் கூறினார்.  கைரி கெடாவில் போட்டியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.  கைரியின் தாயார் கெடாவைச் சேர்ந்தவர். அவர் (கைரி) கெடா மக்களின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்கிறார். அது அவரைப் பொறுத்தது. கெடாவில், இது ஒரு திறந்தவெளி மற்றும் அனைவருக்கும் சுதந்திரமானது. நமது நாடு சுதந்திரமானது… ஜனநாயகமானது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம். கெடாவில் போட்டியிட விரும்பும் எவரையும் நான் வரவேற்கிறேன் என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, மாநில பாரிசான் நேஷனலில் (பி.என்) ஒரு அரசியல் மறுமலர்ச்சியை முன்னெடுக்க கைரியைப் போன்ற ஒரு தலைவர் தேவை என்று கெடா அம்னோ இளைஞர் தகவல் தலைவர் முகமது சஃப்வான் ஜாஃபர் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. முன்னாள் சுகாதார அமைச்சரின் சித்தாந்தமும் சிந்தனையும் கெடா மக்களின் மனநிலையில் ஒரு மாற்றத்தைத் தூண்டக்கூடும் என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்று, முன்னாள் அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ  ஹிஷாம்முதீன் துன் ஹுசைன் மற்றும் கைரி உட்பட, பல்வேறு நிலைகளைச் சேர்ந்த 6,252 முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியில் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here