ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாணுக்கு அறுவை சிகிச்சை …

அமராவதி,உடல்நலக் குறைவு காரணமாக ஆந்திர துணை முதல்வரும் ஜன சேனை கட்சி தலைவருமான பவன் கல்யாணுக்கு இன்று அறுவை் சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து ஜன சேனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பவன் கல்யாண் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று நடந்த அதிகாரப்பூர்வ கூட்டத்தின் போது கல்யாணுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டது. பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நடைபெற இருந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. பின்னர் தொடர்ந்து இன்று மாலை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

பவன் கல்யாணை சுமார் ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், முழுமையாகக் குணமடைய அதிக காலம் எடுக்கும் என்றும் அவர்கள் எச்சரித்ததாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here