நம் பூமியை பாதுகாப்போம், நம் எதிர்காலத்தை பாதுகாப்போம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி உலகம் முழுவதும் “புவி தினம்” அனுசரிக்கப்படுகிறது. மனிதர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையான இந்த பூமியை பாதுகாப்பதற்கான அவசியத்தை உணர்த்தும் நாளாக இது விளங்குகிறது. 1970ஆம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட புவி தினம், இன்று உலகளாவிய இயக்கமாக வளர்ந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், காடுகள் அழிவு, நீர் மாசுபாடு போன்ற பிரச்சினைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

இன்றைய உலகில், தொழில்நுட்ப முன்னேற்றம் அதிகரித்தாலும், இயற்கை வளங்களின் அழிவு வேகமாக நடைபெற்று வருகிறது. மரங்கள் வெட்டப்படுகின்றன, ஆறுகள் மாசுபடுகின்றன, விலங்கினங்கள் அழிந்து வருகின்றன. இதனால் மனித வாழ்வும் ஆபத்துக்குள்ளாகிறது. புவி தினம் ஒரு விழாவாக மட்டுமே பார்க்கப்படக்கூடாது. அது நமக்கு ஒரு எச்சரிக்கை. “நாம் இயற்கையை காப்பாற்றவில்லை என்றால், இயற்கை நம்மை காப்பாற்றாது” என்ற உண்மையை நினைவூட்டும் நாள். சிறிய செயல்கள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

மரம் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், நீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மின்சாரத்தை வீணாக்காமல் இருப்பது போன்றவை ஒவ்வொருவராலும் செய்யக்கூடியவை. இளம் தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் பற்றிய பொறுப்புணர்வு வளர்ந்தால், எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும் அல்லவா! “நம் பூமியை பாதுகாப்போம், நம் எதிர்காலத்தை பாதுகாப்போம்”. இது மக்கள் ஓசையின் புவி தின சிறப்பு தகவல்

ராமேஸ்வரி ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here