பங்சாரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது

கோலாலம்பூர், பங்சாரில் உள்ள ஜாலான் தெலாவி சாலையில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. விசாரணைகளுக்கு உதவுவதற்காக, 27 மற்றும் 33 வயதுடைய அந்த இருவரும், சிலாங்கூர், கிளாங்கில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.

காவல்துறையினர், ஒரு தோட்டாவுடன் கூடிய துப்பாக்கி மற்றும் ஒரு போலி கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். சந்தேக நபர்களில் ஒருவருக்கு 17 குற்றப் பதிவுகளும், மற்றவருக்கு ஐந்து பதிவுகளும் உள்ளன. சந்தேக நபர்கள் இருவரும் ஏப்ரல் 29 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்  என்று அவர் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார். மேலும், விசாரணைகள் தொடர்கின்றன என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here