விஜய்யால் திமுகவிற்கு இந்த நிலைமை வரும்னு கருணாநிதியே நினைத்திருக்க மாட்டார் – ராம் கோபால் வர்மா

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் மாநில அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க உள்ளது.

திமுகவை, தனது முதல் தேர்தலிலேயே விஜய் பின்னுக்குத் தள்ளியிருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திய விஜய், தற்போது தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளார்.

இந்தத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் (மெஜாரிட்டி) கிடைக்காததால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை விஜய் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் விஜய் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்களை பகிர்ந்து பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி விழா ஒன்றில் கலந்துகொள்கிறார். அவருக்குப் பின்னால் சிறுவயது விஜய் நின்றுகொண்டிருக்கிறார். விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரும் அப்படத்தில் உள்ளனர்

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ராம் கோபால் வர்மா, “தனக்குப் பின்னால் நின்றுகொண்டிருக்கும் இந்தச் சிறுவன், ஒருநாள் தனது கட்சியையே தோற்கடிப்பார் என்று கலைஞர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here