கோலாலம்பூர்:
சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டதைத் தொடர்ந்து, ““Iman Mustaqim”” என்ற பெயரிடப்பட்ட பேஸ்புக் கணக்கு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்தப் பதிவில் சிலாங்கூர் அரசு தொடர்பில் உணர்ச்சிகரமானதும், இழிவு படுத்தும் விதமாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் , இது பொதுமக்களிடையே, குறிப்பாக இனம், மதம் மற்றும் ராயல்டி (3R) ஆகியவற்றில் விசுவாசமின்மை மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்று, கூட்டரசு குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர், டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜெயின் கூறினார்.
“இந்தப் பதிவு ஆகஸ்ட் 28 அன்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது என்றும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவு (D5) கீழ் இப்போது வழக்கில் உள்ளது” என்றும் அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வழக்கு விசாரணையை பாதிக்கக்கூடிய தவறான தகவல்களை ஊகிக்கவோ அல்லது பரப்புவதையோ தவிர்க்குமாறும் சுஹைலி பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.









