வரலாற்றில் இதுகாறும் இல்லாத வகையில் மிகப் பெரிய உருமாற்றக் காலக்கட்டத்தை அச்சுத் தொழில்துறை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் தொடர் செயற்பாடுகளின் மூலமும் பாரம்பரியமான நடவடிக்கைகளின் மூலமும் இயங்கி வந்த அச்சுத் தொழில் இப்போது இலக்கவியல் புத்தாக்கம், நிலைத்தன்மை அத்யாவசியங்கள், தன்னியல்பான மேம்பாடுகளைச் சார்ந்ததாக மாறி இருக்கிறது.
AI எனப்படும் செயற்கை புத்தாக்கத் துறை சார்ந்த உற்பத்தி ஆற்றலின் மூலம் நவீன அச்சமுறைகள் மிக திறனாகவும் சாதுரியமாகவும் இலகுவானதாகவும் இருக்கிறது.
இலக்கவியல் அச்சுத் துறை மேம்பாடு, குறிப்பாக மையைப் பயன்படுத்திய அச்சுமுறையும் லேசர் எனப்படும் கதிர்வீச்சு முறையிலான அச்சுக்களின் மூலம் துல்லியமான புகைப்படங்கள், ஒரே சமயத்தில் துரிதமாக ஏராளமான பிரதிகளை அச்சிடுவது இதற்கு முன்பு எய்தப் பெறாத திறன்களாக விளங்குகின்றன.
இந்தவகை தொழில்நுட்பத்தின் வாயிலாக வீணான செலவினங்கள் கட்டுப்படுத்தப்படுவதோடு நிலையான தரமான அச்சுமுறையின் மூலம் வணிகத் துறையும் தங்குத் தடையின்றி துரித வளர்ச்சி காணும் நிலை உருவாகிவிட்டது.
நிலைத்தன்மையே தற்போது முதன்மை இலக்கு
உலகளாவிய சந்தையில் அச்சுப் பிரதி நடவடிக்கைகள் மக்கும் தன்மைக் கொண்ட மை, மறுபயனீடு செய்யப் ப்படத்தக்க அடிப்படை வேதியியல் பொருள்கள், எரிபொருளைச் சிக்கன மாகப் பயன்படுத்தக் கூடிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
விவேக தானியங்கி ஏஐ செயற்பாடுகளின் வழி அச்சு சார்ந்த நடவடிக்கைகள்
நெறிப்படுத்தப்பட்டிருப்பதோடு காலத் தேவைக்கு ஏற்புடைதாகவும் இயங்குகின்றன. பேரளவிலான சிறு நடுத்தர தொழில்கள் இதன் மூலம் தங்கள் உற்பத்தி ஆற்றலை கார்பன் மாசுகளை குறைக்கக் கூடிய ஆக்கத் திறனைக் கொண்டிருக்கின்றன.
அதே சமயத்தில் 3டி முறையிலான அச்சு நடவடிக்கைகளும் முன் மாதிரியானதும் நவீன தொழிற்திறன் உற்பத்தி ஆற்றலை ஏற்படுத்தியுள்ளன. புதிய நிறுவனங்க@ளா ஏற்கெனவே உள்ள நிறுவனங்களோ முன்னுதாரண தயாரிப்புகளைப் பயன்படுத்தி சிக்கலான. தற்சமயம் மாற்றி அமைக்கப்பட்ட பாகங்களை விரைவாகவும் குறைந்த விலையிலும் பாரம்பரிய வகையிலும் மே ற்கொள்ள வகை செய்கிறது. இந்த முறையின் அடிப்படையில் 3டி அச்சு” முறை விண்வெளி தொழில்நுட்பம். ஆரோக்கியப் பராமரிப்பு, தானியங்கி தொழில்துறை, பயன்பாட்டு பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு அணுகூலங்களை சாத்தியமாக்குகிறது.
உலகளாவிய சந்தை நடைமுறை
கடந்த சில ஆண்டுகளில் உலக அச்சுச் சந்தை உத்வேகமிக்க நிலைத்தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2025ஆம் ஆண்டில் 343.63 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மதிப்பீட்டை இந்த 2026ஆம் ஆண்டு 356.16 பில்லியன் அமெரிக்க டாலராக தக்க வைத்து 3.6% (CARG) வளர்ச்சி நிலையைப் பதிவு செய்திருக்கிறது.
வர்த்தக ரீதியிலான அச்சுத் துறைக்கு இந்த அடைவுநிலை உத்வேகமளித்திருக்கிறது. விளம்பர நடவடிக்கைகளுக்கான தேவைகளும் இதன் மூலம் அதிகரிக்கின்றன. பத்திரிகைகள், புத்தகங்களுக்கு தொடர்ந்து தெவைகளையும் இந்நிலை அதிகரிக்கிறது. வாசிக்கும் பழக்கமும் நகர்ப்புறங்களில் மேலோங்க இது துணை செய்கிறது.
உருமாற்ற அச்சு முறையில் ஜெர்மன் உலகுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது. ஹெய்டல்பெர்கர் டிரக்மாஸ்சினென் ஏஜி, கோனிக் பாவ்ரர் போன்ற நிறுவனங்கள் அச்சுமுறையில் பாராம்பரியம் என்ற போர்வையில் உருமாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டன. இலக்கவியல் தொழில்நுட்பத்தையும் உருமாற்ற அச்சுமுறையையும் ஒருங்கிணைத்து நவீனப் புத்தாக்கத் துறையை அந்நிறுவனங்கள் மேம்படுத்தியுள்ளன.
குறைந்தபட்ச பராமரிப்புகளின் வழி அதிக அளவிலான தரம் மிக்க உற்பத்தியை உயர்ந்த நிர்ணயங்களின் வாயிலான கனிணி பணிமுறைக்கு 4.0 தொழில்துறை மாற்றி இருக்கிறது.
இலக்கவியல் துறையில் 3டி உலக அச்சுத் துறையில் பிற நாடுகளையெல்லாம் பின் தள்ளி அமெரிக்க முன்னணியில் இருக்கிறது. சந்தையில் 30 % பங்கையும் அமெரிக்கா வகிக்கிறது.புதிய வகை மூலப் பொருள்கள், துரித வளர்ச்சிஶீ குறைந்தபட்ச பராமரிப்புகளுடன் கூடிய உயர்தர தயாரிப்புகளை வெளியிடும் Stratasys Ltd., 3D Systems Corp, HP Inc போன்ற தொழில்துறை பயனர்களும் இதில் அடக்கம்.
இந்தத் துறையில் ஆசியாவும் துரிதவளர்ச்சி காணுகிறது.சீனாவின் BLT (Bright Laser Technologies), Tianjin Lim Tech Co மூலமும் சீனா இத்துறையில் Selective Laser Melting (SLM) Binder Jetting தொழில்நுட்பத்திலும் முன்@னறிக் கொண்டிருக்கிறது.
ஜப்பானின் ஆளுமையும் இந்தத் துறையில் மிகச் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்கிறது. Komori, Canon, Epson, Ricoh போன்ற பிரபலமான ஜப்பானிய நிறுவனங்கள் பாரம்பரிய அம்சங்களையும் இலக்கவியல் நவீன கூறுகளையும் ஒன்றிணைத்து நிலைத்தன்மை வாய்ந்த பன்முகப்படுத்தப்பட்ட உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு தீர்வு காணத் தகுந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்குகின்றன.
அதிகரிக்கும் வட்டார போட்டியாற்றலை ஈடு செய்யத் தக்கதாக மலேசியாவில் அச்சுத் துறை வளர்ச்சி உள்ளது
மலேசியாவைச் சேர்ந்த இந்தியச் சமுதாயத்தினருக்கு அச்சு பிரதி என்பது தனிப்பட்ட சிறப்பு மதிப்பைக் கொண்டதாகவே விளங்குகிறது. தமிழ்ப் பத்திரிகை தொடங்கி தாய்மொழி பதிப்புகள் வரையில் அச்சுப் பிரதி என்பது இந்நாட்டு இந்திய சமுதாயத்தின் தலைமுறைக் கடந்த தனித்துவம் மிக்க அடையாளமாகவே மாறிவிட்டது. நவீன கால தொழில்துறை, சமூக மாற்றங்களுக்கேற்ப துரித வளர்ச்சிக்காணும் ஆதாயம் மிக்கத் துறையாக இந்த அச்சுத் துறை இந்தியர்களுக்கு பயன்தருகிறது.
இலக்கவியல் உருமாற்றம், நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட தேவைகள், 4.0 தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றின் வாயிலாக வட்டார அச்சுத் தொழில்துறையில் மலேசியா முக்கிய நாடாக உருவெடுத்திருக்கிறது. உள்நாட்டு அனைத்துலக @பாட்டியாற்றலை எதிர்கொள்ள உள்நாட்டு தொழில்துறையினர் அச்சு இயந்திரம், மை சாதனங்கள், எரிபொருள் திறன் தொழில்நுட்பக் கூறுகளில் மலேசிய உற்பத்தியாளர்கள் முதலீடு செய்கின்றனர்.
NIMP எனப்படும் 2030 புதிய தொழில்துறை பெருந்திட்டத்தின் வாயிலான நாட்டின் இலக்குக்கு உகந்தவாறு இந்த மாற்றம் அமைந்திருக்கிறது. விவேகமான வேலை முறை, கணிப்புகளை கையாளுதல், உற்பத்தி திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தும் ஒருங்கிணைந்த செயற்பாட்டு முறையாக என்ஐஎம்பி அமைந்திருக்கிறது.
இலக்கவியல் முறையில் திறன் பெற்ற ஆள்பலம், பசுமை நடைமுறை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் பேக்கேஜிங், லேபளிங், கல்வி, சில்லறை வியாபாரம், இணைய வியாபாரத்தில் மலேசிய அச்சுத் தொழில்துறை உலகச் ச ந்தை வாய்ப்பு தேவைகளைப் பூர்த்திச் செய்யக் கூடிய வலுவான இடத்தை வகிக்கிறது.
கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி 2025 ஆம் ஆண்டுக்கு இடைபட்ட காலகட்டத்தில் 180க்கும் @மற்பட்ட ம@லசிய நிறுவனங்கள் காகிதம், பேக்கேஜிங், அச்சுப் பதிப்பு துறைகளின் வழி 2.9 பில்லியன் ரிங்கிட்டுக்கும் @மற்பட்ட முதலீடுகளை பிரதிநிதித்தது. தயாரிப்புத் துறைக்கான லைெசென்சும் பெறப்பட்டது.
நம்பகத் தன்மை வாய்ந்த போட்டியாற்றல் மிக்க வட்டார கேந்திரமாக மலேசியா நாளுக்கு நாள் வலுப்பெறுவதோடு சாத்தியக் கூறுகளோடு உருவெடுத்திருப்பதற்கான அனுகூலமான வளர்ச்சியாக இது அமைந்திருக்கிறது.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (மிடா) தொடர்ந்து இயந்திரத்திலிருந்து தன்னியல்பு முறை அடிப்படையிலான 4.0 தொழில்துறை வளர்ச்சியின் அடிப் படையில் தொழில்துறையினருக்கு சாதகமாக செயல்படுகிறது. ஏற்றுமதிக்குத் தகுந்த அச்சுப் பிரதி பேக்கேஜிங் முறை நடவடிக்கைகளில் மலேசியாவை பிரபலப்படுத்த நவீன சாதனங்களில் முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் Automated Capital Allowance (Automation CA) எனப்படும் தானியக்க மூலதன அலவன்ஸ் திட்டமும் கூடுதல் உதவிநிதியை வழங்குகிறது.
உள்நாட்டு வெற்றி கதைகள்
Team Printers Sdn.Bhd. :1984 இல் தொடங்கப்பட்ட Team Printers நிறுவனம் தொடர்ந்து தரம் உயர்த்தப்படும் தொழில்நுட்பங்கள், தானியக்க முறை, ஏஐ தொழில்நுட்ப செயற்பாடுகளின் மூலம் மலேசியாவின் வட பகுதியில் வெற்றிகரமான பேக்கேஜிங் விநியோகஸ்தராக உருவெடுத்

திருக்கிறது. மின்னியல், மருத்துவம், உணவு தொழில்துறைகளில் பீடு நடைபோடும் இந்த நிறுவனம் தரம். நம்பகம். உறுதிமிக்க தளவாடக் கூறுகளின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
Tiong Tat Printing Industry Sdn.Bhd. :தொழில்துறையில் 30
ஆண்டுக்கும் @மற்பட்ட அனுபவத்தைக் கொண்ட Tiong Tat Printing Industry Sdn.Bhd. நிறுவனம் முழுக்க முழுக்க பேக்கேஜிங் துறையில் ஆரோக்கியப் பராமரிப்பு, மொத்த வணிகம், மருத்துவத் துறைகளில் (FMCG) மாறுபட்ட அதிநவீன அச்சு தொழில்நுட்பத்தையும் சொந்த R&D கொண்டிருக்கிறது.

Vivar Printing Sdn.Bhd :1984ஆம் ஆண்டில் @தாற்றுவிக்கப்பட்ட Vivar Printing Sdn.Bhd நிறுவனம் மலேசியாவில் மிகப் பெரும் சாதனைப் படைத்த ஏற்றுமதி அச்சு நிறுவனமாக விளங்குகிறது. ஒ@ர வர்ணத்தில் அச்சிடப்படும் அச்சு நிறுவனமாக இருந்த அது இப்போது உலகளாவில் அடையாளப்படுத்தப்படும் புத்தகங்கள், அச்சு பேக்கேஜிங்கில் சாதனைப் படைத்த நிறுவனமாக பிரும்மாண்ட வளர்ச்சி கண்டிருக்கிறது. இந்த நிறுவனம் இன்றைய காலகட்டத்தில் 150க்கும் @மற்பட்ட நாடுகளுக்கு புத்தகங்களை ஏற்றுமதி செய்கிறது. 8,000 திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட அந்த நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளின் மூலம் தோராயமாக 80% வருமானத்தைப் பெறுகிறது.
வளர்ச்சி கண்ட அச்சுப் பதிப்பு கேந்திர மையமாக மலேசியா
ஸ்திரமான வியூக அமைப்பு, வலுவான தளவாட தொடர்புமுறை, உலகத் தரம் வாய்ந்த விநியோகிப்பாளர் என்ற மலேசியாவின் நிலைப்பாடுகளின் அடிப்படையில் தரம் வாய்ந்த அச்சுப் பதிப்பு, பேக்கேஜிங்ஏற்றுமதி சந்தைக்கான விளம்பரங்கள் இதன் மூலம் ஈர்க்கப்படுகின்றன. தன்னியல்பு மூலதன ஊக்கத் தொகை போன்றவற்றின் மூலமும் என்ஐஎம்பி எனப்படும் 2030 புதிய தொழில்துறை பெருந்திட்டத்தின் வாயிலாகவும் அரசாங்கம் இந்தத் திட்டங்களுக்கு உதவுகிறது.
அச்சுத் துறையில் உற்பத்தியாளர்களாகவும் பணியாளர்களாகவும் உள்ள மலேசிய இந்தியர்களுக்கான வாய்ப்புகள் மிக தெளிவுப்பட இருக்கிறது. இந்தத் தொழில்துறை தொடர்ந்து விரிவாக்கம் காண்கிறது. தற்சமயம் உள்ள கொள்கைகளின் ஆதரவுடன் அனைத்துலக சந்தையில் இந்தத் துறைக்கான வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.
தங்கள் வணிகத் துறைகளை இப்போது நவீனமாக்கிக் கொள்ளுவோர் வருங்காலத்தில் மலேசிய அச்சு த் தொழில்துறை வடிவாக்கத்தின் சிறப்புக்கு வித்திட்டவர்களாக விளங்குவர்.




















