மலாக்கா: வரலாற்று சிறப்பு மிக்க நகருக்கு சுற்றுலா பயணியாக தான் செல்கிறேன் என்றும், மலாக்கா தேர்தல் பிரச்சாரத்திற்காக அல்ல என்றும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார். தங்கா பத்து அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அலி முகமட்டின் அழைப்பின் பேரில் மலாக்காவிற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
நான் எனது பழைய நண்பர்களை (பந்தாய் குண்டோர் மற்றும் தஞ்சோங் கிளாங்கில்) சந்திக்க வந்தேன். இது வரவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக இல்லை என்று அவர் இன்று(அக். 30) கம்போங் ஹைலாம் மீனவர்கள் படகுத்துறைக்கு விஜயம் செய்த பின்னர் கூறினார். அன்றைய பாரிசான் நேஷனல் தலைமையிலான மாநில அரசாங்கத்தின் போது கம்போங் ஹைலாத்தில் மீனவர்களுக்குக் கிடைத்த வசதிகள் குறித்தும் திருப்தி அடைவதாக நஜிப் கூறினார்.
கடந்த வாரம், சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், மலாக்கா தேர்தலுக்காக தேர்தல் தொடர்பான கூட்டங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தார். மாநில தேர்தலுக்கான எஸ்ஓபியையும் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க இருக்கிறது. நவம்பர் 8ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நாளாகவும், நவம்பர் 20ஆம் தேதி மலாக்கா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாகவும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.
























