பீஜிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். விமானம் மூலம் சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு சென்ற அதிபர் ட்ரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன மற்றும் அமெரிக்க நாட்டின் கொடிகளை ஏந்தியபடி சீன நாட்டினுடைய பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் டிரம்ப்புக்கு வரவேறு அளித்தனர். 2017-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அதிபர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.








