அதிமுக தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்: சி.வி சண்முகம்

சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எங்களை நீக்குவதற்கு பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இல்லை. ஒற்றை தலைமையை நாங்கள்தான் கோரினார். அதற்கான பலனை இன்று அனுபவிக்கிறோம். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி செய்யும் ஒரே வேலை கட்சியில் இருந்து நீக்குவதுதன். எடப்பாடி பழனிசாமி பொறுப்புக்கு வந்தததில் இருந்து தொடர் தோல்விதான். வீடு தேடி வந்த தலைவர்களை நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கியவர் எடப்பாடி பழனிசாமிஅதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடியே காரணம், நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் எடப்பாடி பழனிசாமி.

“என்றைக்கு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தோமோ அன்றைக்கே அதிமுக குடும்ப அரசியலுக்கு சென்று விட்டது. தோல்விக்குப் பொறுப்பேற்பவரே உண்மையான தலைவர். அதிமுக பல தேர்தல்களில் தோற்றாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. வெற்றி பெற்றால் தன்னால் தான் என்பதும் தோற்றால் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கைகாட்டுபவரும் நல்ல தலைவர் அல்ல. எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிவிட்டது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here