ஜப்பானில் ஜோகூர் மாணவர்களின் சாதனை; அனைத்துலக புதுமை விருதை வென்ற ஜோகூர் பாங்சா முன்னோடி பள்ளி மாணவர்கள்

ஜப்பாளில் நடைபெற்ற பெற்ற அனைத்துலக இளைஞர் உச்சிமாநாடு, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல்,கணிதம் (ஸ்டெம்) கல்வி பரிமாற்ற நிகழ்ச்சியில் ஜோகூர் மாநில மாணவர்கள் சாதனை படைத்து, சிறந்த புதுமை யோசனை விருதை வென்று மலேசியாவிற்கும் ஜோகூருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். ஜப்பானின் ஒசாகா கியோய்கு பல்கலைக்கழகத்தில் கடந்த மே 11 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜோகூர் பாங்சா முன்னோடி பள்ளித் திட்டத்தின் கீழ் செயல்படும் செரி கோத்தா புத்ரி 2 இடைநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இந்த வெற்றியை பெற்றனர்.

அமெரிக்கா, சீனா, கனடா, ஹாங்காங், ஆசியான் நாடுகள் உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகளைச் சேர்ந்த 12 அனைத்துலக குழுக்களுடன் போட்டியிட்ட ஜோகூர் மாணவர்கள், தங்களின் தங்களின் தனித்துவமான கண்டுபிடிப்பின் மூலம் நடுவர்களின் கவனத்தை ஈர்த்தனர். இந்த வெற்றியை பெற்ற குழுவில் ஸ்ரீநிதி கிருஷ்ணன், பார்ஹான் அஸ்ரா அபதுல் ரஹிம், முகமது டோர்விஷ் தானி தர்வானி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கு ஆசிரியர் யோகேஸ்வரி செல்லையா வழிகாட்டியாக
செயல்பட்டார். கடந்த ஆண்டு, ஆசிரியர் யோகேஸ்வரி செல்லையா சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கிரேஷன் என்பது பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், இயற்கை நிறப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட சுற்றுச் குழலுக்கு உகந்த வண்ண மெழுகுக் கண்டுபிடிப்பாகும். இந்த புதுமைத் திட்டம், 1. ஆட்டிஸம் குழந்தைகளுக்கான உணர்வு திறன் சிகிச்சை கல்வியை ஸ்டெம் முறையுடன் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு. அனைவர் இணைப்பு கல்வி, சமூக நலன் ஆகிய அம்சங்களையும் இந்த கண்டுபிடிப்பு வலியுறுத்துகிறது என கல்வி தகவல் ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்னான் தாமின் தெரிவித்தார்.

இந்த திட்டம் புதுமை திறன்மட்டுமன்றி, சுற்றுச்சூழல்,பாதுகாப்பு, அனைவர் இணைப்பு கல்வி, சமூக நலன் போன்ற அம்சங்களையும் வலியுறுத்தியதாக நடுவர்கள் பாராட்டினர். மேலும்! நிலையான வளர்ச்சி இலக்குகள் 4, 11, 12 ஆகியவற்றுடன் இணைந்த முயற்சியாகவும் இது அமைந்துள்ளது. இந்தச் சாதனைக்கு ஜோகூர் மாநில கல்வித்துறை, ஜோகூர் மாநில அரசு, ஜோகூர் மாநில ராஜா ஸரித் சோஃபியா அறக்கட்டளை ஆகியவை ஆதரவு வழங்கின. போட்டிக் கான தீவிர பயிற்சி, தயாரிப்பிற் காக 10 ஆயிரம் ரிங்கிட் நிதியும் வழங்கப்பட்டது. இந்த மாணவர் குழுவை பள்ளித் தலைமை ஆசிரியர் சித்தி நோர்பாயா தலைமையேற்று வழிநடத்தினார். மாணவர்கள் அனைத்துலக மேடையில் சிறப்பாக செயல்பட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கோகி கருணாநிதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here