லங்காவி போதைப்பொருள் விநியோகக் கும்பல் முறியடிப்பு 191 பேர் அதிரடி கைது

லங்காவி தீவில் இயங்கி வந்த பெரிய போதைப்பொருள் விநியோகக் கும்பலை ஓப் லங்கா எனும் அதிரடி நடவடிக்கையின் மூலம் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதல் திரட்டப்பட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில் ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்தச் சோதனையில் அக்கும்பலின் முக்கியப் புள்ளிகள் உட்பட மொத்தம் 191 பேர் கைது செய்யப்பட்டதாக அதன் இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

லங்காவி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடத்தப்பட்ட 231 சோதனைகளில் சுமார் 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சதித் திட்டத்தில் காவல்துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பப்படுவதால் சொஸ்மா உள்ளிட்ட கடுமையான சட்டங்களின் கீழ் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் அனைத்துலகக் கும்பலுடன் இதற்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் தகவல்களை அவர் மறுத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here