அரசு பஸ்களில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் – போக்குவரத்துறை அமைச்சர் …

சென்னை, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையி லான மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு. பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப் பட்டு கோடை விடுமுறை விடப்பட்டது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதியும், 4 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதியும் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் மாநிலம் முழுவதும் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது. வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்து இருந்தது. வெயிலால் ஏற்படும் வெப்பவாத சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டன.

இந்தநிலையில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இருப்பதை கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று பள்ளிகளை ஜூன் 4-ந்தேதி திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக தேவையான ஆயத்தப்பணிகள் அனைத் தும் நிறைவு செய்யப்படுவதையும், மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற் கான போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதன் மைக்கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அரசு பள்ளி மாணவ, மாணவியர் சீருடையுடன் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவன அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம் புதிய பேருந்து அட்டை வழங்க அவகாசம் தேவைப்படும் நிலையில் மாணவர்கள் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here