சட்டமன்றத்த சந்தைக்கடையா ஆக்கிட்டாங்க – செல்லூர் ராஜு தாக்கு

மதுரை, மதுரையில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,

வாயில் வந்ததையெல்லாம் பேசுபவன் தலைவன் அல்ல. முதல்-அமைச்சர் விஜய் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஒரு தலைமுறையையே விஜய் பாழ்படுத்தி கொண்டிருக்கிறார். ஒரு சட்டமன்ற வரலாற்றில் முதல்-அமைச்சருக்கு ஒரு தகுதியுள்ளது. ஒரு நடிகராக பேசுவது வேறு. முதல்-அமைச்சராக பேசுவது வேறு. சட்டமன்றத்தில் உரையாற்றும் போது மிகவும் நாகரீகமாக பேச வேண்டும். ராஜாஜி, காமராஜர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார், ஸ்டாலின் ஆகியோர் அந்த நாற்காலியில் அமர்ந்துள்ளனர்.

சட்டமன்றமா, சந்தக்கடையா

சட்டமன்றத்தில் இவரை போல யாராவது பேசியுள்ளார்களா. சட்டமன்றத்தில் செய்கை காண்பிப்பது எல்லாம் காரியம். அது சட்டமன்றமா, சந்தக்கடையா. பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவு வரவேண்டும் தோழா என்று எங்கள் தலைவர் சொன்னது. என் தலைவரை உச்சரிக்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

மாண்புமிகு முதல்-அமைச்சர் விஜய் அவர்களே நீ யோக்கியமானவர் என்று சொல்ல முடியுமா. ஒரு படத்திற்கு எவ்வளவு வாங்கினாய். அதில் எவ்வளவு வெளியே சொன்னாய். நீ நடித்த புலி படத்திற்கு ரூ.15 கோடி வாங்கி குறைந்த கணக்கு காண்பித்து, ரூ.1.5 கோடி அபராதம் கட்டியது மறந்துவிட்டதா. நீயே ஒரு களவாணி. உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. நீ ஒரு விரலில் சுட்டி காட்டலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here