உலுலங்காட்டில் டிங்கி கட்டுப்பாட்டில் உள்ளது பொது மக்களிடம் விழிப்புணர்வு அவசியம்

உலுலங்காட் மாவட்டத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  அண்மையில்  காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் சந்திரன் ராமசாமி தெரிவித்தார். இங்குள்ள டூசுன் துவா, சுங்கை ராமால், செமினி, காஜாங், பலாக்கோங் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்கள் நடவடிக்கை கட்டுப்பாட்டில் உள்ளது. பெர்னாங், செராஸ் ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வசிக்கின்ற பொது மக்கள் சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேசமயம் வீட்டின் முன்புறம் பின்புறப் பகுதிகளில் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்க இடமாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் தேவையற்றப் பொருட்கள், குப்பைகளை அகற்றி தூய்மையான சூழலைப் பராமரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் காஜாங் நகராண்மைக் கழகம், உலுலங்காட் சுகாதார அலுவலகம், வட்டார சமூகநல இயக்கங்கள் ஒன்றிணைந்து துப்புரவுப் பணிகள், விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஏடிஸ் கொசுக்கள் டிங்கி காய்ச்சல் விவகாரங்களுக்குத் தீர்வு காணும் வகையில் அந்த நடவடிக்கைகள் அமையப் பெற்றுள்ளதாகவும் சந்திரன் கூறினார்.

எம். அன்பா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here