சென்னை, த.வெ.க. தலைவரும், தமிழகத்தின் முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், வரும் 22-ந் தேதி தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நீண்ட பல காலமாக நடிகராக பிறந்த நாளை கொண்டாடிய அவர், முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது.
அதனால், இந்த முறை பிறந்த நாளை வித்தியாசமாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.எல்.ஏ. அலுவலகம் தயார்
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் ஜோசப் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.









