முதல் -அமைச்சர் விஜய் தலைமையில் ஜூன் 29,30-ல் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு

சென்னை தலைமை செயலகத்தில் விஜய் தலைமையில் ஜூன் 29,30-ல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகளுக்கு மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல்-அமைச்சர் தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த மாநாட்டின்போது அரசின் நலத்திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்நிலையில் விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த பிறகு முதல்முறையாக கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு வரும் ஜூன் 29, 30 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை, மற்றும் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here