பராமரிப்பாளர் வீட்டில் இறந்த பெண் குழந்தை; விசாரணைக்காக பெண் கைது

சுங்கைப்பட்டாணி,   பீடோங்கில் உள்ள குழந்தை பராமரிப்பாளர் வீட்டில், ஜூன் 22 அன்று உணவூட்டப்படும்போது நாற்காலியில் இருந்து கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படும் 11 மாத பெண் குழந்தை இன்று உயிரிழந்தது.

அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனையில் (HSB) சிகிச்சை பெற்று வந்த குழந்தை, காலை 10.42 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக கோல மூடா காவல் துறைத் தலைவர் ஏசிபி ஹன்யான் ராம்லான் தெரிவித்தார்.

நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், சம்பவத்திற்குப் பிறகு தனது மகள் சுயநினைவின்றி இருப்பதாக, அதே நாளில் பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் குழந்தை பராமரிப்பாளர், குழந்தையின் தந்தையிடம் தெரிவித்ததாக அவர் கூறினார். விசாரணைக்கு உதவுவதற்காக 30 வயதுகளில் உள்ள ஒரு பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கு 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் ஹன்யான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here