மும்பை, சியா கோயல் தனது காதலன் சேத்தனுடன் முன்பே லோஹாகாட் கோட்டைக்கு சென்று, அங்குள்ள மலையில் இருந்து கேத்தன் விஷாலை எப்படி தள்ளிவிட வேண்டும் என்று பயிற்சி செய்துள்ளார்.
நிச்சயதார்த்தம்
புனே ககுஞ்சே பகுதியைச்சேர்ந்தவர் இளம் தொழில் அதிபர் கேதன் விஷால் அகர் வால்(வயது 26). இவரது குடும்பத்தினர் ரியல் எஸ்டேட் துறையில் தடம் பதித்து பெரும் பணம் படைத்தவர்களாக விளங்குகின்றனர்.
இவருக்கும், மசாலா மற்றும் முந்திரி வியாபாரம் செய்யும் குடும்பத்தை சேர்ந்த சியா கோயல்(20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற நவம்பர் மாதம் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதால், இளம் ஜோடியினர் பல இடங்களுக்கு சென்று வந்தனர்.







