காரகாஸ் வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளுக்கு மத்தியில் கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலையில் ஒரு நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் குலுங்கின.
67.6 லட்சம் பேர் பாதிப்பு
ரிக்டர் அளவுகோலில் முதலில் 7.1 என்ற அளவிலும், பின்னர் 7.5 என்ற அளவிலும் இரு நிலநடுக்கங்கள் கடுமையாக தாக்கின. இதனால், தலைநகர் காரகாஸ் உள்பட பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 15 அடுக்குமாடிகளை கொண்ட கட்டிடங்கள் எல்லாம் சரிந்து விழுந்தன. 67.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்க கூடும் என ஐ.நா. மதிப்பிட்டு உள்ளது.
வெனிசுலாவின் முக்கிய சர்வதேச விமான நிலையம் பாதிப்படைந்து உள்ளது. கட்டிடங்கள் தரைமட்டமானதில், ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1,500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் காயமடைந்தும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமலும் போயுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.








