எம்.ஆர்.டி நிலையத்தில் நகரும் படிக்கட்டில் சிறுநீர் கழிப்பது போன்ற செயலை பின்பற்ற வேண்டாம்

சமீபத்தில் ஒரு எம்.ஆர்.டி நிலையத்தில் நகரும் படிக்கட்டில் சிறுநீர் கழிப்பது போல் காணப்பட்ட ஒரு நபரைப் பின்பற்ற வேண்டாம் என ரேபிட் கேஎல் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபேஸ்புக் பதிவில், அந்த ரயில்வே நிறுவனம், தங்கள் நிலையங்கள், ரயில்களின் தூய்மை ஒரு கூட்டுப் பொறுப்பு என்று கூறியுள்ளது.

தவறான அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்களை (முறையற்ற இடங்களில் சிறுநீர் கழித்தல், ரயில்களில் சாப்பிடுதல் அல்லது குடித்தல், அநாகரிகமான நடத்தை) நீங்கள் கண்டால், உடனடியாக நிலைய ஊழியர்களிடமோ அல்லது துணைப் போலீசாரிடமோ புகாரளிக்கவும், அல்லது எங்கள் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என்று அது கூறியுள்ளது. ‘த்ரெட்ஸ்’ தளத்தில் வைரலாகப் பரவி வரும் அந்தக் காணொளியில், தித்திவாங்சா எம்.ஆர்.டி நிலையத்தில், அரைக்கால் சட்டை அணிந்த ஒருவர் நகரும் படிக்கட்டில் இறங்கும்போது சிறுநீர் கழிப்பது போல் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here