கொம்தார் கட்டிடத்தின் 68-வது மாடியிலிருந்து விழுந்து 18 வயது இளைஞர் பலி!

கோலாலம்பூர்:

பினாங்கு, ஜார்ஜ்டவுனில் உள்ள பிரபல ‘கொம்தார்’ (Komtar) கட்டிடத்தின் 68-வது மாடியிலிருந்து கீழே விழுந்து 18 வயதுடைய உள்ளூர் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 4:05 மணியளவில் இச்சம்பவம் குறித்துப் பொதுமக்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்ததாகத் தீமூர் லவூட் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டெண்ட் கமிஷனர் அப்துல் ரோசாக் முகமட் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் மெக்கல்லம் (Macallum) பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக்கட்டிடத்தின் 6-வது மாடியில் உள்ள கூரைப்பகுதியில் பலத்த காயங்களுடன் கிடந்த அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் இச்சம்பவத்தில் சந்தேகப்படும்படியோ அல்லது சதிச்செயல்கள் ஏதும் இருந்ததாகவோ ஆதாரங்கள் இல்லை என்றும், இச்சம்பவம் ‘திடீர் மரணம்’ (Sudden Death Report – SDR) என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here