சேவல் சண்டையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவருக்கு தலா RM20,000 அபராதம்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேவல் சண்டையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இருவருக்கு தலா RM20,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால், அவர்கள் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று, இன்று அமர்வு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

விலங்குகள் நலச் சட்டம் 2015 இன் பிரிவு 32 (1)(a) இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டதுடன் , தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து படிக்கப்பட்ட இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, முகமட் நசீர் முகமட் தகாங், 47, மற்றும் முகமட் ரைமி மனாஃப், 33, ஆகியோருக்கு எதிராக, அமர்வு நீதிமன்ற நீதிபதி நஸ்லிசா முகமட் நஸ்ரி இந்த அபராதத்தை விதித்தார்.

குற்றப்பத்திரத்தின்படி, செப்டம்பர் 3, 2020 அன்று அதிகாலை 4.15 மணியளவில், Kampung Bukit Tok Beng, Kuala Nerus இல் உள்ள ஒரு வீட்டின் பின்னால் உள்ள குடிசையில், இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர்கள் மீது கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here