அண்மையில் டெல்லியில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீடம் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு வாழ்த்துச்சொல்ல தமிழகத்திற்குச் சென்றிருந்தார் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் ஞான சைமன். வெவ்வேறு நாட்களில் நடைற்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டு விழா இரண்டு நிகழ்ச்சிகளில் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்.
முதல் நிகழ்ச்சி சைதாப்பேட்டை, திறந்தவெளி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் சிறப்பு வருகயாளராக கலந்து கொண்டார். 500க்கும் மேற்பட்ட அரங்கம் நிறைந்த கண்ணதாசன் அபிமானிகள். அந்த விழாவில் சிறப்பு அங்கத்தில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட தயாரிப்பாளர் இயக்குநர் திரு எஸ். பி. முத்துராமன் அவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் காவிரி மைந்தன் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து தன் அன்பைப் பரிமாறிக் கொண்டார் ஞான சைமன்.
மற்றொரு நாளில் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் , கலைமாமணி கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கண்ணதாசன் நூற்றாண்டு விழாவிலும் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார். கவியரங்கம், சிறப்பு சொற்பொழிவு போன்ற அங்கங்கள் நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தன.

சிறப்பு வருகையாளராக கலந்து கொண்ட ஞான சைமன் அவர்களுக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது. கவிஞர் வாலி மற்றும் கவியரசு கண்ணதாசன் இருவருக்கும் உள்ள நெருக்கத்தையும் அன்பையும் தன் உரையில் பகிர்ந்து கொண்டார். தமிழகத்தில் மட்டுமல்ல. மலேசியாவிலும் கண்ணதாசன் நூற்றாண்டு விழா கோலாலம்பூர் உட்பட இந்த வருடம் முழுவதும் மாதம் ஒரு நிகழ்ச்சி ஒ வ்வொரு மாநிலத்திலும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் கண்ணதாசன் அறவாரியத்தின் தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ சரவணன் அவர்களின் *தலைமையில் நடைபெற்று வருகிறது என்றும் தன் உரையில் பதிவு செய்துள்ளார் அனைத்துலக ரீதியில் அங்கீகரிக்கப்பட பெட்டாலிங் ஜெயா லயன்ஸ் கிளப்பின் உதவித் தலைவரான ஞான சைமன்.
ஐந்நூருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தினர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர். சிறப்பு வருகையாளர் என்ற நிலையில் ஞான சைமன் அவர்களுக்குச் சிறப்புச் செய்து நினைவு பரிசு வழங்கினார் கலைமாமணி கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள்.









