புதுடெல்லி, ஆகஸ்டு 15-ம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், ‘ஹர் கர் திரங்கா’ (ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி) இயக்கத்தில் பொதுமக்கள் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளியை (reel) பகிர்ந்த பிரதமர் மோடி, “ஆகஸ்ட் 15-ஐ பெருமையுடன் கொண்டாடுங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துங்கள், ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) கனவை நனவாக்க உறுதிபூணுங்கள். ஹர் கர் திரங்கா, கர் கர் திரங்கா, ஹர் மன் திரங்கா (ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு மனதிலும் மூவர்ணக் கொடி)” என்று கூறினார்.










