கெந்திங் ஹைலேண்ட்ஸில் ஒரு பெரிய போதைப்பொருள் கும்பல் செயல்படுகிறதா? – காவல்துறை மறுப்பு

 கெந்திங் ஹைலேண்ட்ஸில் சட்ட அமலாக்கத் துறையின் கட்டுப்பாடுகளின்றி ஒரு பெரிய போதைப்பொருள் கும்பல் செயல்படுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கூற்றுகளை பகாங் காவல்துறை மறுத்துள்ளது.

அப்படி ஒரு கும்பல் இருந்திருந்தால், தாங்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்திருப்போம் என்று பகாங் காவல்துறையின் தற்காலிகத் தலைவர் அஸ்ரி அக்மர் அயோப் கூறினார்.

காவல்துறை அறிக்கை இருக்கும் வரை, எங்கு நடந்தாலும் குற்றச் சம்பவங்கள் குறித்து நாங்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று இன்று குவாந்தானில் அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

‘த்ரெட்ஸ்’ என்ற சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு பயனர் பதிவிட்டிருந்ததில், கெந்திங் ஹைலேண்ட்ஸில் ஒரு பெரிய போதைப்பொருள் கும்பல் செயல்படுவதாகவும், பலமுறை புகார் அளிக்கப்பட்ட போதிலும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here