சட்டவிரோத மின்சிகரெட் விற்பனை: ராந்தாவ் பாஞ்சாங்கில் இருவர் கைது, பணம் பறிமுதல்

ராந்தாவ் பாஞ்சாங்கில் உள்ள ஒரு சட்டவிரோத படகுத்துறையில் இரண்டு தாய்லாந்து நாட்டு வேப் சப்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மலேசிய வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலித்து தாய்லாந்துக்கு திரும்ப முயன்றபோது பிடிபட்டனர்.

36 மற்றும் 18 வயதுடைய இருவரிடமிருந்து 47,900 மலேசிய ரிங்கிட்டும் தாய்லாந்தின் 120,000 பாத் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பணம் மின்சிகரெட் விற்பனை வருமானம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரும் தும்பாட் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என GOF எனப்படும் தென்கிழக்கு பிரிகேட் பொது இயக்கப் படையின் commander Datuk Nik Ros Azhan Nik Abd Hamid தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here