கோலாலம்பூர்:
சுங்கை பெசி நெடுஞ்சாலை, Besraya-வின் Seri Kembangan சந்திப்புப் பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட 400 மீட்டர் சாலை அகலப்படுத்தும் திட்டம் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் அது போக்குவரக்கிற்காகத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கோலாலம்பூரிலிருந்து Balakong மற்றும் Putrajaya நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் இனி மிகவும் வசதியான பயணத்தை அனுபவிக்க முடியும்.
மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM-ன் ஆதரவுடன் 5.22 மில்லியன் ரிங்கிட் செலவில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டமானது, Besraya நெடுஞ்சாலையின் தெற்கு திசை 4.2 முதல் 3.8 கிலோமீட்டர் வரையிலான பாதையை உள்ளடக்கியதாகும்.
உச்ச நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும், South Mines டோல் பிளாசாவிலிருந்து UPM, Balakong மற்றும் Putrajaya செல்பவர்களின் பயணத்தை பாதிக்காத வகையில், சீரமைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சாலை திறக்கப்படுவதினால், தெற்கு திசைக்கான (tidal lane) நிறுத்தப்படுவதை தொடர்ந்து, இரு திசைகளிலும் போக்குவரத்து மேலும் மேம்படும் என்று Besraya நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





















