சுவெரேவ் புதிய சாம்பியன் : யு.எஸ். பொது டென்னிசில் அசத்தல்

யு.எஸ். பொது டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் சுவெரேவ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். பைனலில் அமெரிக்காவின் ஷெல்டனை வென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், யு.எஸ். பொது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவெரேவ் 29, அமெரிக்காவின் பென் ஷெல்டன் 23, மோதினர். தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய  சுவெரேவ் முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் இருவரும் மாறி மாறி ’கேம்’ வெல்ல 6-6 என ’டை பிரேக்கருக்கு’ சென்றது. இதில் ஸ்வெரேவ் 7-6 என வென்றார். தொடர்ந்து போராடிய ஷெல்டன், மூன்றாவது செட்டை 7-5 என போராடி கைப்பற்றினார்.

நான்காவது செட்டில் சுதாரித்துக் கொண்ட சீவெரேவ், 6-2 என மிகச் சுலபமாக வென்றார். மூன்று மணி நேரம், 33 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அலெக்சாண்டர் சுவெரேவ் 6-3, 7-6, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று யு.எஸ்.  முதல் முறையாக கோப்பை வென்றார். தவிர இது இவரின் 2ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆனது. ஏற்கெனவே இந்த ஆண்டு பிரெஞ்ச் பொது சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவில் தனது 26ஆவது பட்டத்தைக் கைப்பற்றினார் ஸ்வெரேவ்.

 இதன்மூலம் 2003க்கு பின் யு.எஸ். பொது கோப்பை வென்ற அமெரிக்க வீரர் என்ற ஷெல்டனின் கனவு தகர்ந்தது. கடந்த 2003இல் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தவிர, ஆர்தர் ஆஷுக்கு (1968) பின் யு.எஸ். பொது கோப்பை வென்ற அமெரிக்க கறுப்பின வீரர் என்ற வாய்ப்பும் நழுவியது. யு.எஸ்., பொது பைனலில் வென்ற அலெக்சாண்டர் சீவெரேவுக்கு கோப்பையுடன் ரூ. 52.56 கோடி பரிசு கிடைத்தது.

ஷெல்டனுக்கு ரூ. 26.76 கோடி பரிசாக வழங்கப்பட்டது. ஏ.டி.பி., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவெரேவ், ஸ்பெய்னின் கார்லஸ் அல்காரஸ், முறையே ’டாப்-3’ இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். யு.எஸ். பொது பைனல் வரை சென்ற அமெரிக்காவின் பென் ஷெல்டன், 9ஆவது இடத்தில் இருந்து 4ஆவது இடத்துக்கு முன்னேறினார். இத்தொடரில் முதல் சுற்றோடு திரும்பிய செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5ஆவது இடத்தில் இருந்து 12ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

யு.எஸ். பொது கோப்பை வென்ற சுவெரேவ் கூறுகையில் பைனலில் ரசிகர்களின்ஆதரவு ஷெல்டனுக்கு அதிக அளவு இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. இது, எங்கள் அணியின் கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு. என்னை சிறந்த வீரராக கருதவில்லை. ஏனெனில் ஜானிக் சின்னர் (இத்தாலி), அல்காரஸ் (ஸ்பெயின்) முழு உடற்தகுதியுடன் இருந்திருந்தால் என்னை அப்படி சொல்ல முடியாது. இருப்பினும் இந்த ஆண்டு எனக்கு ராசியானதாக அமைந்தது  என்றார்.

கடந்த 2020இல் நடந்த யு.எஸ். பொது பைனலில் சுவெரேவ், ஆஸ்திரியாவின் டொமினிக் தியமிடம் தோல்வியைடந்தார். அப்போது நழுவவிட்ட கோப்பையை 6 ஆண்டுகளுக்குப் பின் தட்டிச் சென்றார் சீவெரேவ். யு.எஸ். பொது ஒற்றையரில் கோப்பை வென்ற 2ஆவது ஜெர்மனி வீரரானார் சுவெரேவ். இதற்கு முன் 1989இல் மேற்கு ஜெர்மனியின் போரிஸ் பெக்கர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here