கால்பந்தில் மெஸ்ஸி புதிய மைல்கல் சாதனை

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி, குரூஸ் அஸுல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி, குரூஸ் அஸுல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

100வது கோல்

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில், சக வீரர் லூயிஸ் சுவாரஸ் கொடுத்த கிராஸ் பந்தை, அவர் ஒரு அற்புதமான டைவிங் ஹெடர் மூலம் கோலாக மாற்றினார். இது இன்டர் மியாமி அணிக்காக அவர் அடித்த 100வது கோலாகும்.

வெறும் 115 போட்டிகளிலேயே இந்தச் சாதனையை நிகழ்த்தியதன் மூலம், ‘மேஜர் லீக் சாக்கர்’ (MLS) வரலாற்றில் ஒரு கிளப்பிற்காக 100 கோல்களை அடித்த அதிவேக வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.

மெஸ்ஸி இதுவரை மியாமி அணிக்காக 100 கோல்களை அடித்ததோடு மட்டுமில்லாமல் 55 கோல்களை அடிக்க உதவியும் உள்ளார்.

கடந்த ஆட்டத்திலும் 81வது நிமிடத்தில், மெஸ்ஸி கொடுத்த கார்னர் கிக்கை காசிமிரோ தலையால் முட்டி கோலாக்கி, அணியின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம், இன்டர் மியாமி தனது வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here