மாபெரும் சமூகப் பாதுகாப்பு விழா!- ஒன்றுதிரண்டு வாருங்கள்; நன்மைகளைப் பெற்றுச் செல்லுங்கள்

ஐ லிண்டுங்யு (i LINDUNGu) மெகா விழா மீண்டும் சமுதாயத்தைச் சந்திக்க வருகிறது. மக்களுடன் கெசுமாவின் விருப்பங்களை முன்னிருத்தும் இன்னும் நிறைவான அணுகுமுறையுடன் இந்த விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது. சமுதாயத்தின் அனைத்து நிலையையும் சார்ந்தவர்களுக்காக இன்னும் நெருக்கமாக சமூகப் பாதுகாப்புச் சேவையை இது கொண்டு வருகிறது.

நாளை18ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை STRAND MALL, KOTA DAMANSARA-வில் இந்த விழா நடைபெறவுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடம்பெற உள்ளன. சமூகத்துடன் உரையாடுதல், சமூகப் பாதுகாப்புச் சேவை,குடும்ப நடவடிக்கைகள், உள்ளூர் கலைஞர்களின் மேடைப் படைப்புகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

காலை 10.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரை சொக்சோ இதற்கு ஏற்பாடுசெய்துள்ளது. சுமார் 60,000 பேர் வரை வருகை தரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சியான குடும்பம், பொழுதுபோக்கும் சூழ்நிலை ஆகியவற்றில் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நேரடியாக மக்களுக்குக் கொண்டுசெல்லவும் ஆலோசனை சேவை பற்றிய தகவல்களை சமுதாயத்திற்கு வழங்கவும் முக்கிய தளமாக ஏற்பாட்டாளர்கள் இந்த விழாவை அமைத்திருக் கின்றனர்.

கோலாலம்பூர் வட்டார மக்களே; வேலை வாய்ப்புகளை வழங்கும் முதலாளிகள் தரப்பினரே, PERKESO-வின் இந்த ஆண்டின் மாபெரும் சமூகப் பாதுகாப்பு விழா இதோ மீண்டும் வந்துவிட்டது.

வேலை வாய்ப்பு வழங்கும் தரப்பினரே; முந்தைய ஆண்டுகளைப் போலவே ஊழியர்களுக்கான தாமத சந்தா செலுத்துவதற்காக விதிக்கப்படும் அபராதக் கட்டணம் 80 விழுக்காடு வரை தள்ளுபடிசெய்யப்பட்டிருக்கிறது.
இந்தப் பொன்னான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மேலும் 24 மணி நேர பாதுகாப்புத் திட்டத்தில் பதிவுசெய்துகொள்ளாத தரப்பினர் மீண்டும் இணைவதற்கு பிரத்தியேக முகப்பிடங்களை பெர்கேசோ ஏற்பாடு செய்திருக்கிறது.

கெசுமா எனப்படும் மனிதவள அமைச்சு மக்களுடன் என்ற லட்சியத்தின் கீழ் பெர்கேசோவின் இந்த மாபெரும் விழா பொதுமக்களின் பங்கேற்பு மூலம் மகத்தான வெற்றியைப் பெறும் என்று பெர்கேசோ நம்பிக்கை தெரிவித்திருக்கின்றது.

மித்ரா,எச்ஆர்டி கார்ப், டேலண்ட் கார்ப் உள்ளிட்ட கெசுமாவின் கீழ் இயங்கும் 11 ஏஜென்சிகளின் பங்களிப்போடு அனைத்து சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக்கொள்ளுங்கள்.

உள்ளூர் கலைஞர்களின் @மடை நிகழ்ச்சிகள் மக்களைக் கவரும் வகையில் இடம்பெற உள்ளன. இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. லிண்டுங் கெர்ஜாயா திட்டத்தின் கீழ் 2,000த்திற்கும் மேற்பட்ட வேலை வாயப்புகள் இந்த விழாவில் வழங்கப்படுகின்றன.

வேலை தேடுவோர் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இலவச ”காதாரப் பரிசோதனை, தலைக்கவச விநியோகம், பிரபலங்களின் சமையல் கலை, ஜும்பா நடனம், கமால் அட்லி, எல்லி மஸ்லி போன்ற பிரபலங்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் உள்ளன.

முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் கிடைக்கும் அதிர்ஷ்ட குலுக்கலிலும் பங்கேற்று நீங்களும் அதிர்ஷ்டசாலியாகலாம். செப்டம்பர் 18 முதல் 20 வரை உற்சாகத்தோடு கொண்டாடுங்கள். நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

மேல் விவரங்களுக்கு:
கீழ்க்காணும் இணையதளத்தை வலம் வரலாம்.
www.perkeso.gov.my

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here