ஈப்போ சந்தை கட்டிடத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஈப்போ: ஜாலான் லக்ஷமணாவில் (Jalan Laksamana) அமைந்துள்ள ஈப்போ மத்திய சந்தை கட்டிடத்திலிருந்து கீழே விழுந்ததில் 29 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (செப்டம்பர் 23) காலை சுமார் 9.25 மணியளவில் இச்சம்பவம் குறித்த தகவல் தங்களுக்குக் கிடைத்ததாக ஈப்போ மாவட்டக் காவல் துறைத் தலைவர் (OCPD) உதவி ஆணையர் முகமது நஜிப் ஹம்சா தெரிவித்தார். உள்ளூரைச் சேர்ந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக, ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு புதன்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள், ஈப்போ காவல் தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை 05-245 1500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here