கெடா வெள்ளம் : மேலும் இரண்டு தற்காலிக நிவாரண மையங்கள் திறப்பு

அலோர் ஸ்டார்:

நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள எட்டு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின, இதைத்தொடர்ந்து கெடாவில் மேலும் இரண்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன.

கெடா பேரிடர் மேலாண்மை செயலகப் பிரிவுத் தலைவர் முஹமட் சுஹைமி முகமட் ஜெய்ன் கூறுகையில், மாவட்டத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேர் SK தித்தி காஜா PPS மற்றும் SMK ஆலோர் மேரா PPS ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8.00 மணி நிலவரப்படி, 34 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 107 பேர் மாநிலம் முழுவதும் செயற்பாட்டிலுள்ள மொத்தம் மூன்று நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், “இன்று காலை வானிலை சிறிது மேம்பட்டதால் குபாங் பாசுவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் மட்டம் குறைந்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

குபாங் பாசு மலேசிய குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி முகமட் அடெனின் சுஹைமி கூறுகையில், மாவட்டத்தில் மூன்று மணி நேரம் பெய்த கனமழையால் அங்கு வெள்ளம் ஏற்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here